தமிழ்நாடு அரசியலில் கடந்த ஒரு வாரத்தில் சில முக்கிய திருப்பங்கள் நடந்துள்ளது. அதன்படி கடந்த 6ஆம் தேதி, அதிமுக அமைப்புச் செயலாளர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் ஆகிய பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் விடுவிக்கப்பட்டார். தொடர்ந்து கடந்த 8ஆம் தேதி, மதிமுகவிலிருந்து மல்லை சத்யா நிரந்தரமாக நீக்கப்பட்டார். இந்நிலையில், இன்றைய தினம் (செப்.11) பாமக-வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து அன்புமணி நீக்கப்பட்டுள்ளார்.




