செட்டிநாடு முட்டை குழம்பு
தேவையான பொருட்கள்
முட்டை – 6
பெரிய வெங்காயம் – 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
தாளிப்பதற்கு – பட்டை, சோம்பு, கிராம்பு – சிறிதளவு
சமையல் எண்ணெய் – 5 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
வறுத்த அரைக்க தேவையான பொருட்கள்
கொத்தமல்லி – 2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 5
மிளகு – 1 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
சோம்பு – 1 ஸ்பூன்
பட்டை – 2 துண்டு
ஏலக்காய் – 2
அன்னாசி பூ – 1
கிராம்பு – 4
தேங்காய் துருவல் – கால் மூடி
கருவேப்பிலை – சிறிதளவு
செய்முறை
ஐந்து முட்டையை வேக வைத்துக் கொள்ளவும்.கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி வர கொத்தமல்லி, மிளகு, சோம்பு,சீரகம், அன்னாசிப்பூ, பிரிஞ்சி இலை, பட்டை,ஏலக்காய், கிராம்பு, கல்பாசி,காய்ந்த மிளகாய் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து பொன் நிறமாக வறுக்கவும்.மசாலா பொருட்கள் கருகாமல் பார்த்துக் கொள்ளவும்.இதனுடன் தேங்காய் துருவல், கொஞ்சமா கருவேப்பிலை சேர்த்து சிறிது நேரம் வதக்கிவிட்டு ஆறவைத்து தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.கடாயை அடுப்பில் வைத்து மூணு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பட்டை, சோம்பு, கிராம்பு போட்டு தாளித்து நறுக்கிய பெரிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்துபொன் நிறமாகும் வரை வதக்கவும்.இதனுடன் இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.பின்பு மஞ்சள் தூள்,அரைத்த தக்காளி விழுதும் சேர்த்து வதக்கவும்.தக்காளி, நன்கு வதங்கி பச்சை வாசனை போனவுடன்அரைத்த மசாலா விழுது சேர்க்கவும்.இதனுடன் மூன்று டம்ளர் தண்ணீர் குழம்புக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க கொதிக்க விடவும்.குழம்பு கொதித்து கெட்டியானவுடன் ஒரு முட்டையை மட்டும் உடைத்து ஊற்றவும். இவ்வாறு செய்யும் போது குழம்பு நன்கு ருசியாக இருக்கும்.பின்பு கடாயை மூடி வைத்து 5 நிமிடம் முட்டையை வேக வைக்கவும்.இந்த முட்டை வந்தவுடன் வேக வைத்த முட்டையை குழம்பில் சேர்த்து அடுப்பு சிம்மில் வைத்து ஐந்து நிமிடம் முடி வைக்கவும்.ஐந்து நிமிடம் கழித்து மல்லி இலை தூவி இறக்கினால் மிகவும் சுவையான செட்டிநாடு முட்டை குழம்பு ரெடி.




