சென்னை – புதுச்சேரி வரை கடல்வழி உயர்மட்டச் சாலை! புதிய அறிவிப்பு!

 

 

சென்னை முதல் மாமல்லபுரம் வழியாக புதுச்சேரி வரை புதிய கடல்வழி உயர்மட்டச் சாலை அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அறிவித்துள்ளார்.

 

மும்பை–நவி மும்பை கடல் இணைப்புச் சாலை திட்டத்தை முன்மாதிரியாகக் கொண்டு, இந்தத் திட்டம் பகுதி பகுதியாக செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இயற்கைச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன், நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார். இந்தச் சாலை திட்டம் நிறைவேற்றப்பட்டால் சென்னை முதல் புதுச்சேரி வரையிலான போக்குவரத்தில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read Previous

தமிழகத்தில் 500 விளையாட்டு மைதானங்கள் மேம்பாடு! ரூ.50 கோடி ஒதுக்கீடு!

Read Next

படப்பிடிப்பில் அருண் விஜய்க்கு காயம்! ‘இருளன்’ படக்குழு அதிர்ச்சி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular