தமிழகத்தில் 500 விளையாட்டு மைதானங்கள் மேம்பாடு! ரூ.50 கோடி ஒதுக்கீடு!

 

 

தமிழகத்தில் விளையாட்டு கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில் ரூ.50 கோடி செலவில் 500 விளையாட்டு மைதானங்கள் சீரமைக்கப்பட்டு தரம் உயர்த்தப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

 

மேலும், சர்வதேச தரத்தில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும், மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்காக சென்னையில் சிறப்பு பாரா ஒலிம்பிக் மையம் உருவாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

இதுதவிர, சென்னை பெரம்பூர் மற்றும் வில்லிவாக்கம் பகுதிகளில் புதிய விளையாட்டு பல்நோக்கு மையங்கள் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார். இந்த நடவடிக்கைகள் தமிழகத்தில் விளையாட்டு வீரர்களுக்கான பயிற்சி மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read Previous

ரஜினியின் ‘ஜெயிலர் 2’ ரிலீஸ் தள்ளிப்போகிறதா? வெளியான புதிய தகவல்!

Read Next

சென்னை – புதுச்சேரி வரை கடல்வழி உயர்மட்டச் சாலை! புதிய அறிவிப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular