சென்னை புளியந்தோப்பில் குடிநீரில் கழிவுநீர் கலப்பு: அதிகாரிகள் மீது மக்கள் அதிருப்தி..!!

 

சென்னை புளியந்தோப்பு சாஸ்திரி நகர் பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், பொதுமக்கள் அதிகாரிகள் மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

தவெக எம்.எல்.ஏ. பல்லவி முன்னிலையில் பேசிய அப்பகுதி மக்கள், “பல முறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதிகாரிகள் இதற்கு அச்சப்படுவதில்லை” என குற்றம்சாட்டினர்.

மேலும், குடிநீரின் தரம் குறித்து கேள்வி எழுப்பிய பொதுமக்கள், மக்களின் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினர்.

குடிநீரில் கழிவுநீர் கலக்கும் பிரச்சினை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read Previous

மேகதாது அணை விவகாரம்: முதலமைச்சர் விஜய் ஆலோசனை..!!

Read Next

17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றவாளிக்கு 27 ஆண்டுகள் சிறைத் தண்டனை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular