மேகதாது அணை விவகாரம்: முதலமைச்சர் விஜய் ஆலோசனை..!!

 

கர்நாடக அரசு மேகதாது அணை கட்டும் முயற்சியை தடுப்பது தொடர்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

காவிரி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை பாதுகாப்பது, மேகதாது அணை தொடர்பான சட்ட ரீதியான நடவடிக்கைகள் மற்றும் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காவிரி நீர் பகிர்வு விவகாரம் தொடர்பாக தமிழகமும் கர்நாடகமும் இடையே நீண்டகாலமாக கருத்து வேறுபாடுகள் நீடித்து வரும் நிலையில், மேகதாது அணை விவகாரம் மீண்டும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Read Previous

இங்கிலாந்து புதிய பிரதமராக ஆண்டி பர்ன்ஹாம் நாளை பதவியேற்பு..!!

Read Next

சென்னை புளியந்தோப்பில் குடிநீரில் கழிவுநீர் கலப்பு: அதிகாரிகள் மீது மக்கள் அதிருப்தி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular