சென்னை அம்பத்தூரில் உள்ள ஒரு வீட்டிற்கு, ரூ.91,993 மின் கட்டணம் செலுத்தக்கோரி ரசீது வந்துள்ளது. மின் கட்டணத்தைப் பார்த்து வீட்டின் உரிமையாளர் அதிர்ச்சியடைந்தார். கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கான மின் கட்டணமாக ரூ.91,993 வந்துள்ளது. சுமார் 8,370 யூனிட் மின் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்செட்டான உரிமையாளர், மின் வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். அதன் பேரில், MRT மீட்டர் ரீடிங் மீண்டும் ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளது.




