சென்னை ராமாபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த சிவரஞ்சினி (22) தூங்கிக் கொண்டிருந்தபோது, முகமூடி அணிந்த நபர் அவரது 6 கிராம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றார்.
இதுகுறித்து போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தியதில், சின்ன போரூரைச் சேர்ந்த தனசேகரை கைது செய்தனர்.
விசாரணையில், தனது காதலி ராதிகாவின் ஆலோசனைப்படி இந்தத் திருட்டை நடத்தியதாக தனசேகர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து தலைமறைவாக இருந்த ராதிகாவையும் போலீசார் கைது செய்தனர்.
இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.




