தேனி மாவட்டம் காமயகவுண்டம்பட்டி, கருமாரிபுரத்தைச் சேர்ந்த மதுமிதா (14) என்ற மாணவி ராயப்பன்பட்டியில் உள்ள ஒரு பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் (ஜூலை 22) பள்ளி முடிந்ததும் வீட்டிற்குச் சென்ற மதுமிதா, செல்போன் பார்த்து கொண்டிருந்ததாக தெரிகிறது. இதனை பார்த்த அவரது தாய், செல்போன் பார்ப்பதை நிறுத்திவிட்டு படிக்குமாறு கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த மதுமிதா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.




