பாகிஸ்தானில் பருவமழை தீவிரமடைந்து, கனமழை பெய்து வருகின்றது. இதனால், அங்குள்ள நீர்நிலைகள் பெருமளவில் நிரம்பி பல்வேறு இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதில், பஞ்சாப் மாகாணம் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், வெள்ளத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை சுமார் 234ஆக உயர்ந்துள்ளதாக பாகிஸ்தான் பேரிடர் மேலாணமைத் துறை தெரிவித்துள்ளது. பொதுமக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.




