சென்னை கொளத்தூரை சேர்ந்த 5 நண்பர்கள் இன்று (அக்.02) அதிகாலை கேரளாவுக்கு சுற்றுலா கிளம்பினர். அவர்கள் பயணம் செய்த கார் விழுப்புரம் விக்கிரவாண்டி அருகே சென்று கொண்டிருந்த போது சாலைத் தடுப்பு மற்றும் லாரி மீது பயங்கரமாக மோதியதில் தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் ரிஷி, சம்சுதீன், மோகன் ஆகிய மூவர் உயிரிழந்தனர். 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தூக்க கலக்கத்தில் கார் ஓட்டுநர் இருந்ததால் விபத்து ஏற்பட்டது.




