காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஆந்திர முன்னாள் அமைச்சருமான ராம்ரெட்டி தாமோதர் ரெட்டி உடல்நலக்குறைவால் தனது 73வது வயதில் காலமானார். நல்கொண்டா மாவட்டத்திலிருந்து ஐந்து முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் ஆட்சிக் காலத்தில் ஐ.டி அமைச்சராக பணியாற்றினார். ஹைதராபாத் மருத்துவமனையில் நேற்று (அக்.01) இரவு தாமோதர் உயிர் பிரிந்தது.




