சேலம் மாவட்டத்தில் வளர்ப்பு நாய் கடித்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த தர்மன் (27) என்பவரை, கடந்த ஓராண்டுக்கு முன் அவரது வளர்ப்பு நாய் கடித்துள்ளது. அப்போதே, முறையான சிகிச்சை பெறாமல் இருந்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக உடல் நிலை பாதிக்கப்படவே, மருத்துவமனைக்குச் சென்று சோதித்தபோது, அவருக்கு ரேபிஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில், நேற்று (ஆக.22) உயிரிழந்தார்.




