சோறு வடித்த கஞ்சியை குடிப்பதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என ஆரோக்கிய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். உடல் எடையை அதிகரிக்க விரும்புவோர் இந்தக் கஞ்சியைத் தவறாமல் அருந்த வேண்டும். இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இது குடல் இயக்கத்தை சீராக்கி மலச்சிக்கல் வராமல் தடுக்கிறது. மேலும், இது உடலின் உஷ்ணத்தைக் குறைத்து உடலுக்குக் குளிர்ச்சி அளிக்கும். இந்தக் கஞ்சியில் வைட்டமின்கள் பி1, பி2, பி6, ஈ போன்ற அத்தியாவசிய சத்துக்கள் உள்ளன.




