ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே, வீட்டின் முன்பு தூங்கிக் கொண்டிருந்த 25 வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் டிராக்டர் டிரைவர் கார்த்தி (38) கைது செய்யப்பட்டார். மேலும், அந்தப் பெண்ணை அவரது சாதிப் பெயரைக் கூறியும் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்து கார்த்தியை கைது செய்தனர். இவர் இதற்கு முன்பும் போக்சோ வழக்கில் கைதாகி சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.




