தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து வருவதால், தமிழகத்தில் வரும் ஜன.10-ம் தேதி கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மயிலாடுதுறை, கடலூர், திருவாரூர் மற்றும் நாகை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் ‘ஆரஞ்சு அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. அதே நாளில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.




