ஜவ்வரிசி சர்பத் குழந்தைகளுக்கு ஒருமுறை இதை செஞ்சு கொடுத்து பாருங்க விரும்பி சாப்பிடுவாங்க..!!

ஜவ்வரிசி சர்பத் |

ஜவ்வரிசி சர்பத்
தேவையான பொருட்கள்

ஜெல்லி துகள்கள் – 1 பாக்கெட்
தண்ணீர் – 400 மி.லி
ஜவ்வரிசி – 1 கப் (250 மி.லி)
ஜெல்லி துண்டுகள்
பால் – 1 லிட்டர் காய்ச்சி ஆறவைத்தது
சர்க்கரை – 1/4 கப்
ரோஸ் சிரப்

செய்முறை
1. ஒரு பாத்திரத்தில் ஜெல்லி கிரிஸ்டல்ஸ் , தண்ணீர் சேர்த்து கரைத்து ஒரு டிரேயில் கொட்டி ஜெல்லிதயார் செய்யவும். இதை நன்றாக ஆற விடவும். ஆறியதும் சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி கொள்ளவும்
2. ஒரு கப் ஜவ்வரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்து, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் ஜவ்வரிசியை சேர்த்து வேக வைக்கவும். வெந்ததும் வடிகட்டி மேல கொஞ்சம் குளிர்ந்த நீர் ஊற்றவும்.
3. ஒரு பெரிய பாத்திரத்தில் ஒரு லிட்டர் காய்ச்சி ஆற வைத்த பால் , கால் கப் சாக்கரை, கொஞ்சம் ரோஸ் சிரப் சேர்த்து கலந்து விடவும். வேக வைத்த ஜவ்வரிசியை சேர்க்கவும்.
4. பிரிட்ஜ்ல் இரண்டு மணி நேரம் குளிர வைக்கவும்.
5.ஜெல்லி துண்டுகளை சேர்த்து கலந்து ஜில்லென்று பரிமாறவும்.

Read Previous

உங்க வீட்டு கேஸ் பர்னர் ஒழுங்காவே எரிய மாட்டேங்குதா..?? பளிச்சினு இருந்த பர்னர் கருப்பா மாறியிருடுச்சா..?? அப்போ இதை மட்டும் பண்ணுங்க போதும்..!!

Read Next

குதிரையை விட வேகமாக ஓடக்கூடிய விலங்கு சிறுத்தை ஏன் சிறுத்தை திறன் என்று சொல்லாமல் குதிரை திறன் என்று சொல்கிறார்கள்..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular