இன்று உலகம் முழுவதும் சிறியவராக இருப்பினும் பெரியவராக இருப்பினும் சாக்லேட் என்றாலே ஒரு அதித பிரியம் தான் ஆனால் சாக்லேட் சாப்பிடுவதனால் உடலுக்கு தீமை மற்றும் ஆரோக்கியக்கேடு ஏற்படுவதாக மருத்துவர் அருண்குமார் தெரிவித்துள்ளார்..
சர்க்கரை நோயாளிகள் சாக்லேட்டுக்கு பதிலாக டார்க் சாக்லேட் வாங்கி உண்ணுகிறார்கள், ஆனால் இந்திய சந்தையில் கிடைக்கும் பல டார்க் சாக்லேட்டுகளில் சர்க்கரை அதிக அளவு கலந்திருக்கும், சாதாரண சாக்லேட்டுகளை போலவே இதிலும் சர்க்கரை கொழுப்பு கலோரி ஆகியவை நிறைந்து காணப்படும், நோயாளிகள் இந்த சாக்லேட்டுகளை வாங்கி உண்பதால் விபரீத சுழல்கள் ஏற்படலாம், டார்க் சாக்லேட் வாங்குவதற்கு முன்பு சாப்பிடுவதற்கு முன்பும் மருத்துவ இடம் பரிந்துரை கேட்ட பின்பே டார்க் சாக்லேட் அல்லது சாதாரண சாக்லேட்டுகளை எடுத்துக் கொள்ள வேண்டும், மேலும் சர்க்கரை நோயாளிகள் சாக்லேட் தவிர்ப்பது அவர்களின் உடலுக்கு சிறந்த தீர்வாகும், சர்க்கரை நோய்கள் மட்டுமல்லாமல் சாக்லேட் சாப்பிடுவதால் பல் சொத்தை மற்றும் உடலில் பல நோய்கள் ஏற்படுவதாக மருத்துவர் அருண்குமார் கூறுகிறார்..!!




