டிரம்பின் புதிய ‘TRUTH API’ சேவை: மாதம் ரூ.1 கோடி கட்டணமா?

 

 

அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ‘TRUTH SOCIAL’ தளத்தில் வெளியிடும் பதிவுகளை மற்றவர்களுக்கு முன்பாக தெரிந்துகொள்ளும் வகையில் ‘TRUTH API’ என்ற புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக மாதம் சுமார் ரூ.1 கோடி கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. டிரம்பின் முக்கிய அறிவிப்புகள் மற்றும் பதிவுகளை முன்கூட்டியே அறியும் வாய்ப்பு கிடைப்பதால், பெரும் முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் அதனை பயன்படுத்தி அநியாயமாக லாபம் பெறக்கூடும் என்ற சர்ச்சையும் எழுந்துள்ளது. சந்தை வெளிப்படைத்தன்மை மற்றும் சமநிலையை பாதிக்கும் இந்த நடவடிக்கை சட்ட விதிகளுக்கு எதிரானதாக இருக்கலாம் என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக அமெரிக்க ஊடக நிறுவனங்கள் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Read Previous

ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படுமா? ஈரான் அதிரடி நிபந்தனை!

Read Next

பழனி கோயில் சொத்துகள் மீட்பு: ஆய்வுக்குழு தீவிர நடவடிக்கை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular