நம்மில் பல பேருக்கு டீ குடிப்பது என்றால் மிகவும் பிடிக்கும். தினமும் இரண்டு முறை முதல் மூன்று முறையாவது இதை குடிக்காமல் பல பேர் இருக்க மாட்டார்கள். காலையில் டீ குடித்தால் நமது தூக்கம் குறைந்து விடும். மாலையில் குடிக்கும்போது நமக்கு ஒரு புதிய சக்தி கிடைக்கும். மதியம் குடித்தால் வயிற்றை லேசாக்கும்.
ஆனால் இந்த டீயுடன் ஒரு சில உணவுகளை நாம் சேர்த்துக் கொள்ளக்கூடாது. லெமன் டீயை குடிக்கும் பழக்கம் இங்கு பல பேருக்கு இருக்கிறது. ஆனால் அப்படி குடித்தால் வயிறு தொடர்பான பிரச்சனைகள் அதிகமாக வரும். டி யில் இருக்கும் காபின் லெமனில் இருக்கும் வைட்டமின் சி ஆகியவை இணைந்து வயிற்று எரிச்சலை உண்டாக்குகிறது.
டீயுடன் மஞ்சள் கலந்து ஏதாவது உணவை சாப்பிட்டால் உடல் சூடு வாயுத்தொல்லை உருவாகும். அதுமட்டுமில்லாமல் டீயுடன் எண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிட்டால் ஊட்டச்சத்துக்கள் உரிஞ்சப்பட்டு வயிற்று வலி மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.




