டெல்லி போராட்டம்: காவல் வாகனத்தில் அதிகாரியுடன் வாக்குவாதம் செய்த காங்கிரஸ் எம்.பி. டீன் குரியகோஸ்..!!

 

 

டெல்லி பிரதமர் இல்லம் அருகே நடைபெற்ற போராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.பி. டீன் குரியகோஸ், காவல் வாகனத்தில் டெல்லி காவல்துறை அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

போராட்டத்தின்போது காவலர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில், அதற்கு விளக்கம் அளித்த டீன் குரியகோஸ், காவல்துறையினரை தாக்கவில்லை என்றும், எம்.பி.க்கள் வலுக்கட்டாயமாக நடத்தப்பட்டதையே எதிர்த்து குரல் எழுப்பியதாகவும் தெரிவித்துள்ளார்.

 

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், போராட்டத்தின் போது நடந்த நிகழ்வுகள் குறித்து தொடர்ந்து விவாதம் நிலவி வருகிறது.

Read Previous

தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!!

Read Next

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி; காவல் விசாரணைக்கும் அனுமதி மறுப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular