தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக (எஸ்.பி.) பணியாற்றி வந்த அபிஷேக் குப்தா, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்ட எஸ்.பி. ஆர். சிவப்பிரசாத், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார்.
திருச்சி ஆயுதப்படை டி.ஐ.ஜி. விஜயலட்சுமி, சென்னை ஊர்காவல்படை டி.ஐ.ஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், சென்னை சிபிசிஐடி எஸ்.பி. சண்முகப்பிரியா, சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை மேற்கு சரக எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளார். ராமநாதபுரம் ஏ.டி.எஸ்.பி. மீரா, டி.ஜி.பி. அலுவலகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.




