Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/ksweberd/tamilyugam.in/index.php:35) in /home/ksweberd/tamilyugam.in/wp-content/themes/vinkmag/functions.php on line 264
இந்த 1 பொருளை வாங்கி பூஜை அறையில் தினம்தோறும் பயன்படுத்தி வர, தங்கம் தானாக வந்து சேரும்..!! – Tamil News, Online Tamil News, தமிழ் செய்திகள் – Tamilyugam

இந்த 1 பொருளை வாங்கி பூஜை அறையில் தினம்தோறும் பயன்படுத்தி வர, தங்கம் தானாக வந்து சேரும்..!!

Oplus_131072

இந்த 1 பொருளை வாங்கி பூஜை அறையில் தினம்தோறும் பயன்படுத்தி வர, தங்கம் தானாக வந்து சேரும். அடமானத்தில் இருக்கும் தங்கத்தையும் சீக்கிரம் மீட்டு எடுக்கலாம்.
வேதசத்சங்கம் அந்த ஸ்வர்ணலட்சுமியின் அனுக்கிரகம் இருந்தால் தான் நம்முடைய வீட்டில் தங்கம் சேரக்கூடிய வாய்ப்புகள் வரும். ஒரு வீட்டின் ஐஸ்வர்யத்தை நிலை நிறுத்தக்கூடிய சக்தியை கொண்ட ஒரு உலோகம் தான் இந்த தங்கம். அழகுக்காக நம்முடைய கௌரவத்தை பிரதிபலிக்கும் வகையில் தங்க ஆபரணங்களை இன்று வாங்கி குவிக்கிறார்கள். அதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் சந்தோஷம் நிலையாக இருக்க, வீட்டில் நிரந்தரமான நிம்மதி இருக்கவும் ஒரு குண்டுமணி தங்கமாவது ஒருவருடைய வீட்டில் இருக்க வேண்டும். தங்கம் இருக்கக் கூடிய வீட்டில் மற்ற செல்வங்களும் தானாக வந்து சேர்ந்துவிடும் அதில் ஒரு துளி அளவும் சந்தேகம் கிடையாது.உங்களுடைய வீட்டில் தங்கம் மேலும் மேலும் சேர, உங்களுடைய பெண் குழந்தைகளுக்கு தங்க நகைகளை வாங்கி சேர்க்க, வீட்டில் இருக்கும் நகை அடமானம் போகாமல் இருக்க, அடமானத்திலிருந்து மீட்டு எடுக்கப்பட்ட தங்க நகையை நம் வீட்டிலேயே நிரந்தரமாக தங்க வைக்க ஒரு சில பரிகாரங்கள் இதோ உங்களுக்காக. தங்கத்தை தக்க வைக்க வேண்டும் என்றால் நம்முடைய வீட்டில் எந்த ஒரு பொருள் அதிக பயன்பாட்டில் இருக்க வேண்டும் தெரியுமா. சந்தனம். சுத்தமான சந்தனத்திற்கு தங்கத்தை ஈர்க்கக்கூடிய சக்தி உள்ளது.

நிறைய இடங்களில் சுத்தமான ஒரிஜினல் சந்தன கட்டை விற்கின்றது. அதை வாங்கி வீட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்த சந்தன கட்டையை இழைத்து தினந்தோறும் வீட்டில் இருக்கும் பெண்கள் நெற்றியில் இட்டுக் கொள்ள வேண்டும். அடுத்தபடியாக இந்த சந்தனத்தை இழைத்து அதை பன்னீர் ஊற்றி கலந்து சந்தன பொட்டை வீட்டில் இருக்கும் சுவாமி படங்களுக்கு வைத்து, அந்த சந்தனத்தின் மேல் குங்கும பொட்டை வைக்க வேண்டும்.சுத்தமான சந்தனத்தை இழைத்து அதை எடுத்து கொஞ்சமாக தண்ணீரில் கலந்து வெள்ளிக்கிழமை தோறும் நிலை வாசலில் இரண்டு பக்கத்திலும் தெளித்து விடுங்கள். அதாவது நம்முடைய நிலை வாசல்கால் இருக்கிறது அல்லவா அதற்கு இரண்டு பக்கத்திலும் தேவதைகள் குடிகொண்டு இருப்பார்கள். அந்த இடத்தில் இந்த சந்தன தண்ணீரை தெளிப்பது வீட்டிற்குள் ஐஸ்வர்யத்தை வரவைக்கும்.

சின்ன சின்ன சந்தன கட்டை துண்டுகளாக வாங்கி பூஜை அறையில் ஒன்று வைத்து விடுங்கள். பீரோவில் பணம் வைக்கும் பெட்டியில் ஒன்று வைத்து விடுங்கள். இது தவிர நீங்கள் நகையை எந்த இடத்தில் வைப்பீர்களோ, அந்த நகையை தொட்டபடி ஒரு சிறிய சந்தன சக்கையை வைக்க வேண்டும். சந்தன குச்சி சந்தன கட்டை எங்கெல்லாம் இருக்கின்றதோ அந்த இடத்தில் எல்லாம் தங்கம் சேரும் என்பதும் நம்பிக்கை. (உங்கள் வீட்டில் ஒரு பொட்டு தங்க நகை கூட இல்லை என்றால் பரவாயில்லை. இந்த கட்டையை பீரோவில் வைத்த ஒரு சில நாட்களில் தங்கம் தானாக சேர தொடங்கும்.)அடமானத்தில் தங்கத்தை வைத்து விட்டீர்கள். அதற்கு ஒரு ரசீது கொடுத்திருப்பார்கள் அல்லவா. அந்த ரசீதுக்கு நடுவில் ஒரு சந்தனக்கட்டையை வையுங்கள். சிறிய சந்தன குச்சி வைத்தால் கூட போதும். சீக்கிரமே அந்த அடமானம் வைத்த நகையை மீட்டெடுத்து விடலாம். அடமானத்திலிருந்து எடுத்து வரப்பட்ட நகையை மீண்டும் அப்படியே மற்ற நகைகளோடு சேர்த்து பீரோவில் வைக்காதீங்க.அடமானத்தில் வைக்கப்பட்ட நகை மீண்டும் வீட்டிற்கு வந்தால் அதை முதலில் மஞ்சள் தண்ணீரில் கழுவி எடுத்துவிட்டு, இந்த சந்தன தண்ணீரில் கொஞ்சம் நனைத்து எடுத்து உங்கள் வீட்டு சுவாமி படங்களுக்கு சிறிது நேரம் அந்த நகையை போட்டு வைத்து விட்டு, அதன் பின்பு பீரோவில் எடுத்து பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.ஒரே வரியில் சுருக்கமாக சொல்லப்போனால், எந்த அளவிற்கு நீங்கள் சந்தன கட்டையை வாங்க காசு செலவு செய்கிறீர்களோ, எந்த அளவுக்கு உங்களுடைய வீட்டில் சந்தனத்தை பயன்படுத்துகிறீர்களோ அந்த அளவிற்கு தங்கம் மேலும் மேலும் சேரும்.

Read Previous

சீக்கிரம் பணக்காரர் ஆகணுமா?.. அப்போ தலையணைக்கு அடியில் இதை வைத்து தூங்குங்க..!!

Read Next

நகைக்கடன் தள்ளுபடி செய்ய வாய்ப்பு.. பொதுமக்கள் எதிர்பார்ப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular