சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இளம்பெண் ஒருவர் தனது 2 குழந்தைகளுடன் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரதட்சணை கேட்டு கணவன் கொடுமைப்படுத்துவதாக புகார் பெண் ஒருவர் புகார் அளிக்க ஆட்சியர் அலுவலகம் சென்றுள்ளார். அப்போது திடீரென தான் கொண்டுவந்த மண்ணெண்ணெய்யை ஊற்றி, 2 குழந்தைகளுடன் தற்கொலை செய்ய முயன்றார். உடனடியாக தடுத்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.




