தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா, முன்னணி நடிகையாக இருந்த நிலையில், 1982ம் ஆண்டு எம்ஜிஆரால் அதிமுகவில் இணைக்கப்பட்டார். அதே ஆண்டில் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டார். 1984ம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 1987-ல் எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு கட்சியில் ஏற்பட்ட சவால்களை எதிர்கொண்டு, 1989-ல் அதிமுக பொதுச்செயலாளரானார். 1991-ல் தமிழக முதலமைச்சராக முதன்முறையாக பதவியேற்றார். அதன் பின்னரே அவர் தமிழகத்தின் இரும்புப் பெண்மணியாக உயர்ந்தார்.




