நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை முடிக்க கூடுதல் கால அவகாசம் தேவைப்படுவதால், நவம்பர் 5-ம் தேதிக்கு வெளியீட்டை மாற்ற படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக இப்படம் அக்டோபர் 15-ம் தேதி வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர்.
அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் இணைந்துள்ளதால், ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மேலும் அதிகரித்துள்ளது.




