பெண்ணிடம் தாலி செயின் பறிக்க முயற்சி.. தவெக நிர்வாகி கைது!

 

 

கரூர் மாவட்டம் வேட்டமங்கலம் பகுதியில் ஸ்கூட்டரில் சென்ற பெண்ணை பைக்கில் பின்தொடர்ந்து சென்று தாலி செயினை பறிக்க முயன்றதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் உள்ள CCTV கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், புகளூர் நகர தவெக செயலாளர் நந்தகுமார் என்பவரை அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர்.

 

சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண்ணிடம் தாலி செயின் பறிக்க முயன்றதாக கூறப்படும் இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read Previous

ஆசிரியையின் வீட்டில் புகுந்து நகை பறிப்பு.. சக ஆசிரியை உட்பட 2 பேர் கைது!

Read Next

“41 கட்சிகளை எதிர்த்து முதல்வர் வெற்றி” – அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேச்சு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular