சென்னை அண்ணாநகரில் கராத்தே பயிற்சி பள்ளி நடத்தி வந்தவர் கெபிராஜ். இவர் தனியார் பள்ளியில் பணியாற்றியபோது மாணவிகளை வன்கொடுமை செய்த வழக்கில் கடந்த 2021ல் கைது செய்யப்பட்டார். அவர் மீதான வழக்கு சென்னை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் நேற்று முன்தினம் (ஆக.11) கெபிராஜ் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது. இந்நிலையில் அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50,000 அபாராதமும் விதித்து சற்றுமுன்னர் நீதிபதி உத்தரவிட்டார்.




