ரேஷன் கடைகளின் மூலமாக நுகர்வோர்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், தற்போது வரையிலும் விரல்ரேகை பதிவின் மூலமாகவே ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இப்படி இருக்கையில் தற்போது ரேஷன் கடை தொடர்பாக ஓர் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது விரைவில் ரேஷன் கடைகளில் புதிய வகை தராசுகள் பயன்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. ப்ளூடூத் (அ) USB கேபிளை பாயின்ட் ஆப் செல் கருவியுடன் இணைத்து பயன்படுத்தும் வகையிலாக புதிய எலக்ட்ரானிக் தராசுகள் அளவைக்கு பயன்படுத்த உள்ளன. அளவையாளர் தராசில் எவ்வளவு எடைக்கு பொருள் வைக்கிறாரோ அந்த எடை அளவு உடனுக்குடன் ரசீதாக வழங்கப்படும். இதனால் ரேஷன் பொருட்களை எடை குறைவாக விநியோகிப்பது போன்ற முறைகேடுகள் தடுக்கப்படும்.




