தமிழக வெற்றிக் கழகம் கட்சியைத் தொடங்கிய விஜய், அரசியல் களத்தில் தனது இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். தற்போது இவர் கட்சியின் பெரும்பாலான மாவட்டச் செயலாளர் பதவிகளை நிரப்பி வருகிறார். மேலும், மாநாடு மற்றும் புத்தக வெளியீட்டு நிகழ்வு தவிர, தவெக தலைவர் விஜய் சமீபத்தில் களத்திற்குச் சென்று பரந்தூர் மக்களை நேரடியாக சந்தித்தார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர், விஜய்யை சந்தித்துள்ளார். தவெகவின் தேர்தல் பிரிவு பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டு இருக்கும் ஆதவ் அர்ஜுனா ஏற்பாட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றதாக கூறப்படுகிறது. பிரசாந்த் கிஷோர் தற்போது பீகாரில் தனியாக கட்சி தொடங்கி நடத்தி வருகிறார். இதனால், பிரசாந்த் கிஷோர் நேரடியாக தேர்தல் வியூக பணிகளில் ஈடுபடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.




