பீகாரில் வாக்காளர் பட்டியலில் தேர்தல் ஆணையம் செய்த சிறப்பு திருத்த பணி பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியது. இதுகுறித்து பெரம்பலூரில் இன்று (செப்.01) பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “தேர்தல் ஆணையம் முழுமையாக பாஜக கட்டுப்பாட்டில் சென்றுவிட்டது. தமிழ்நாட்டிலும் பாஜக, சங்பரிவார் அமைப்புகள் தேர்தல் முறைகேட்டில் ஈடுபடலாம். 30 நாட்கள் சிறையில் இருந்தால் பதவியை பறிக்கும் சட்டத்திருத்தம் பாசிசத்தின் உச்சம்” என்றார்.




