ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதாகக் கூறி இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50% வரி விதித்துள்ளது. இது மிக அதிகபட்ச வரி ஆகும். இதனால் இந்திய பொருட்கள் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியர்கள் மத்தியில் அமெரிக்காவுக்கு எதிரான மனநிலை உருவாகியுள்ளது. குறிப்பாக, பெப்சி, கோக், சப்வே, கேஎப்சி உள்ளிட்ட அமெரிக்க தயாரிப்புகளை இந்தியர்கள் புறக்கணிக்க தொடங்கியுள்ளனர்.




