தயிரை உணவுடன் எடுத்து கொள்வதால் ஏற்படும் நன்மைகள்.. தெரியுமா..??

Oplus_131072

தயிரை உணவுடன் எடுத்து கொள்வதால் ஏற்படும் நன்மைகள்.. தெரியுமா?

👉 தயிர் ஓர் அற்புதமான உணவுப் பொருள். பாலில் இருந்து கிடைக்கும் தயிரால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். இந்த தயிரை சாப்பிடுவதால் மட்டுமின்றி, சருமத்திற்கு பயன்படுத்தினாலும் நன்மைகள் கிடைக்கும்.

👉 இரவு நேரத்தில் தயிரை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஆனால் முடியாத பட்சத்தில், தயிருடன் சர்க்கரை அல்லது சிறிது மிளகுத் தூள் சேர்த்து சாப்பிடலாம். இதனால் செரிமானம் மேம்படும்.

*தயிர் தரும் பலன்கள்*

செரிமானம் :

👉 தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும். தயிரானது புரதங்கள், கால்சியம், ரிபோப்லாவின், உயிர்ச்சத்து டீ6 மற்றும் உயிர்ச்சத்து டீ12 போன்ற ஊட்டச்சத்துகள் நிறைந்தது.

பற்களுக்கும், எலும்புகளுக்கும்..

👉 தயிரில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் இருப்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. அதனால் அது உங்கள் பற்களுக்கும், எலும்புகளுக்கும் நல்லதாகும். எலும்புத்துளை நோய் போன்ற சில பிரச்சனைகளை தவிர்க்க வேண்டுமானால், சீரான முறையில் தயிரை உட்கொள்வது நல்லது.

மூல நோயை குணப்படுத்தும் :

👉 மூல நோயால் அவதிப்படுபவர்கள் தயிரை பயன்படுத்தலாம் என ஆராய்ச்சிகள் பரிந்துரைக்கிறது. தயிர் சாதத்துடன் இஞ்சியை சேர்த்து சாப்பிட்டால் உங்களுக்கு நல்ல பயனை அளிக்கும்.

இதயத்தை காக்கும் :

👉 ஆரோக்கியமான இதயத்தை பேணி காக்க தயிர் உதவுகிறது. கொலஸ்ட்ரால் அளவுகளை கட்டுப்பாட்டில் வைக்க இது உதவிடும். தயிரை சீரான முறையில் உட்கொண்டு வந்தால், இதயத்தை ஆரோக்கியமாக பராமரிக்கலாம்.

👉 நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதில் தயிர் முக்கிய பங்கு வகிக்கிறது.

பொடுகு :

👉 பொடுகை நீக்க தயிர் சிறந்த தீர்வாக விளங்கும் என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. உங்கள் தலையின் மீது கொஞ்சம் தயிரை தடவினால் போதும், பொடுகு தொல்லை நீங்கும். பூஞ்சை எதிராக தயிர் செயல்படுவதால், பொடுகை நீக்க.

 

Read Previous

முயல், ஆமை கதையின் லேட்டஸ்ட் வெர்ஷன்..!! கண்டிப்பா படிங்க..!!

Read Next

பாகிஸ்தான் மீது தலிபான் தாக்குதல்..!! 12 பேர் பலி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular