தள்ளுவண்டி கடை கார தக்காளி சட்னி செய்வது எப்படி..??

Oplus_131072

தள்ளுவண்டி கடை கார தக்காளி சட்னி செய்வது எப்படி…..

முதலில் காரத்திற்கு தேவையான காய்ந்த வத்தல் நான்கு அல்லது ஆறு எடுத்துக் கொள்ள வேண்டும் அதை கொதிக்கும் தண்ணீரில் சேர்த்து குறைந்தது ஐந்து முதல் பத்து நிமிடம் ஊற வைத்துக் கொள்ளலாம்.
அடுத்ததாக ஒரு மிக்ஸி ஜாரில் ஊறவைக்க காய்ந்த வத்தல், பொடியாக நறுக்கிய இரண்டு தக்காளி பழம், ஒரு பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது, மூன்று பல் வெள்ளை பூண்டு, அரை தேக்கரண்டி கல்லுப்பு சேர்த்து மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக தாலித்திற்கு ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் அரை தேக்கரண்டி கடுகு, அரை தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, சீரகம் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக இரண்டு காண்பவர்கள், கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்துக் கொள்ளலாம்.

இறுதியாக நாம் அரைத்து வைத்திருக்கும் தக்காளி விழுதுகளை கடாயில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் கலந்து கொள்ள வேண்டும். இப்பொழுது இந்த சட்னியை மிதமான தீயில் நன்கு கொதிக்க விட வேண்டும். நன்கு நுரைத்து கொதித்து வரும் நேரத்தில் அடுத்து குறைத்து கொள்ளலாம்.

இந்த நேரத்தில் மூன்று தேக்கரண்டி அல்லது அரை கப் தோசை மாவு கலவையை சட்னியுடன் சேர்த்து நன்கு கலந்து கொடுத்து அடுப்பை அணைத்து விட வேண்டும். இப்பொழுது சுவையான ரோட்டு கடை தக்காளி சட்னி தயார். இந்த சட்னி சாப்பிடுவதற்கு நல்ல காரணமாகவும் சுவையாகவும் இருப்பதால் இட்லி, தோசை என கணக்கில்லாமல் சாப்பிடலாம்.

Read Previous

போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்..!! வெளியான அறிவிப்பு..!!

Read Next

குறட்டைத் தொல்லை நீங்க ஏலக்காய் மருத்துவம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular