சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின் பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காத்திருப்போர் பட்டியலில் இருந்த சுதாகர் காசிமேடு மீன்பிடி துறைமுகம் சட்டம்-ஒழுங்கு பிரிவுக்கும், தாம்சன் சேவியர் தலைமை செயலக காலனி சட்டம்-ஒழுங்கு பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர். மேலும், பென்சாம் டி.பி.சத்திரம் சட்டம்-ஒழுங்கு பிரிவிலும், விமல் மாம்பலம் சட்டம்-ஒழுங்கு பிரிவிலும் நியமிக்கப்பட்டுள்ளனர்.




