முதலமைச்சர் விஜயின் செயல்பாடுகளை திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சித்துள்ளார்.
முதலமைச்சராக பதவியேற்கும்போது உண்மையாகவும் நேர்மையாகவும் செயல்படுவேன் என உறுதிமொழி எடுத்துக்கொண்ட நிலையில், ஆட்சியில் தவறு நடந்தால் அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
எந்தத் துறையில் தவறு நடந்தது, எவ்வாறான தவறு நடந்தது, யார் அதற்குக் காரணம் என்பதை கண்டறிந்து, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசின் பொறுப்பு என்றும் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
மேலும், தவறுகளுக்கு நடவடிக்கை எடுக்க நேரம் காலம் பார்த்து ஜோசியம் பார்க்க வேண்டுமா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.




