முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்த தவெக தலைவர் விஜய்யின் கருத்தை வரவேற்பதாக பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். முதல்வர் குறித்து கேள்வி எழுப்பிய விஜய்க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் திமுகவினருக்கு கண்டனம் தெரிவித்த அவர், முதல்வர் தனி விமானத்தில் பயணித்தபோது தனது ஆடிட்டரை அழைத்துச் சென்றது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.




