மாணவர்களிடையே சாதி, மத பாகுபாடுகளை களையவேண்டும் என்று முதன்மை கல்வி அலுவலர்களுக்குபள்ளி கல்வித்துறை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார். இது குறித்த சுற்றறிக்கையில், சமத்துவம், சகோதரத்துவத்தை மாணவர்களிடையே வளர்க்க வேண்டும். மாணவர்களிடையே இனம், பாலினம் சார்ந்த பாகுபாடுகளை களையவேண்டும் என கூறப்பட்டுள்ளது. மாணவர்களிடம் சாதிய உணர்வு, பாலின பாகுபாடு போன்ற பிற்போக்குத்தனம் தலையெடுக்காமல் ஆசிரியர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அண்மையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார்.




