தவெக தலைவர் விஜய் மேற்கோள் உள்ள பிரச்சாரத்துக்கு அனுமதி கோரும் மனுவை அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அனுமதி விண்ணப்பத்தை பாரபட்சமின்றி பரிசீலிக்கவும், உயர்நீதிமன்றம் நிர்ணயித்த காலக்கெடுவுக்குள் அனுமதி வழங்க காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடவும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இவ்வழக்கை இன்று பிற்பகல் அவசர வழக்காக விசாரிக்க தவெக கேட்டுக்கொண்ட நிலையில், நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.




