ஆந்திர பிரதேசம் மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில், காதல் மனைவியை கட்டிப்போட்டு, பெல்ட்டால் கணவர் சரமாரியாக அடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கலுஜுவ்வலபாடு கிராமத்தில், நேற்றிரவு (செப்.16) மதுகுடிக்க மனைவி பணம் கொடுக்காததால் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




