தாய்க்கு பின் தாரம் என்றால், தந்தைக்கு பின் தந்தை மட்டுமே..!! படித்ததில் பிடித்தது..!!

அப்பாவுக்கும் அன்பு
காட்ட தெரியும் என்பதை
அவர் தாத்தாவான
பின்பு தான் பார்த்தேன்..

பத்து திங்கள் தாய் பட்ட வேதனையை
தாய்க்கும் பிள்ளைக்குமாய்
ஆயுள் வரை தாங்கிடும்
ஓரே உயிர் அப்பா!..

என்னை மட்டும் அல்ல
என் கனவுகளையும் சுமந்து கொண்டு
நடக்கிறார் என் அப்பா!..

தந்தையின் கடல் அளவு கோபம் கூட
நொடிப்பொழுதில் அடங்கி விடுகிறது
தன் மகளின் சிறு கண்ணீர் துளிகளில்..

உன்னை எதிர்பார்த்து பெற்றெடுப்பாள் அன்னை
உன் எதிர்காலத்தை பெற்றுத் தருவான் தந்தை..

தன் பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காக
வாழ்க்கை முழுவதும் போராடும்
ஒர் உறவு அப்பா..

சுயநலமான இந்த உலகத்தில்
சுயநலமற்ற ஒரு உறவு
அப்பா மட்டும் தான்..

நான் எழுதும் தமிழ் கவிதையில்
நான் கண்ட மிக சிறந்த மூன்று
எழுத்து அப்பா..

என்னை மட்டும் அல்ல
என் கனவுகளையும் சுமந்து கொண்டு
நடக்கிறார் என் அப்பா..

தாய்க்கு பின் தாரம் என்றால்
தந்தைக்கு பின் தந்தை மட்டுமே..

விளையாட பொம்மை வாங்கித் தரும் அப்பாவை விட
விளையாட தானே பொம்மையாக மாறும்
அப்பாவை தான் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கிறது..

கண்ணில் கோபத்தையும்
இதயத்தில் பாசத்தையும்
வைத்திருக்கும் ஒரே உறவு “அப்பா”..

ஒரு தந்தை நமக்கு என்னவெல்லாம் செய்தார் என்பதை
நாம் கடைசி வரைக்கும் உணர்வதில்லை..

தான் கீழே இருந்தாலும்
நம்மை மேலே தூக்கும்
ஓர் உறவு அப்பா..

பலரது வாழ்வில்
கடைசி வரை
புரிந்துகொள்ள
முடியாத புத்தகம்
அப்பா..

அப்பாவின் கோபம்
காணாமல் போவது
மகளிடம் மட்டுமே..

தாய்க்கு பின் தாரம்
ஆனால் தந்தைக்கு
பின் தந்தை மட்டுமே
யாராலும் அந்த இடத்தை
நிரப்ப முடியாது
அவர்க்கு நிகர் அவரே..

ஆயிரம் முறை புன்னகை
பூத்தாலும் தந்தையுடன்
பூக்கும் ஓர் குறுநகைக்கு
ஈடாருவதில்லை..

அப்பாக்களை இழந்த
மகள்களுக்கு மட்டுமே
தெரியும் உலகம்
பாதுகாப்பற்றது என்று..

அம்மாவின் அடி வயிற்று
பிரசவத் தழும்புகளுக்கு
இணையானவை தான்
அப்பாவின் உள்ளங்கை
காய்ப்புகள்..

மகளின் கண்ணீரை காண
பொறுக்காத அப்பாவும்
அவரின் அழுகை நிறுத்த
சிரிக்க முயற்சிக்கும்
மகள்களும் இருக்கும்
வரை காதல்
தோற்று போவதில்லை..

Read Previous

வாழைப்பூ இருக்கா?.. அப்போ இந்த வாழைப்பூ வடை முயற்சி செய்து பாருங்கள்..!!

Read Next

விஜயுடன் எந்த முரண்பாடும் இல்லை..!! அப்போ கூட்டணி?.. விசிக தலைவர் திருமாவளவன் முக்கிய கருத்து..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular