தினமும் கேரட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!!
கேரட்டில் நமது உடலுக்கு தேவையான பீட்டா மற்றும் கரோட்டின் மற்றும் வைட்டமின்கள் தாதுக்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடென்ட் பண்புகள் அதிக அளவில் நிறைந்துள்ளன. இதனால் நாம் தினமும் ஒரு கேரட் ஆவது சாப்பிடுவது நம் உடலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. குறிப்பாக இந்த காலகட்டத்தில் உள்ள குழந்தைகளுக்கு காய்கறிகள் என்றாலே அலர்ஜி. அப்படி இருக்கும் குழந்தைகளுக்கு கண்டிப்பாக தினமும் ஒரு கேரட் ஆவது சாப்பிட பழக்குவது மிகவும் நல்லது. மேலும் கேரட்டில் நார்ச்சத்து அதிக அளவில் நிறைந்துள்ளதால் உடலின் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படாமல் தடுக்க உதவுகிறது. இதில் இயற்கையாகவே கொழுப்பு மற்றும் கலோரிகள் போன்றவை நிறைந்துள்ளன. எடை குறைக்க நினைப்பவர்கள் கண்டிப்பாக கேரட்டை உட்கொள்ளலாம். நீங்கள் உட்கொள்ள கூடிய அனைத்து உணவுகளிலும் கேரட்டை சேர்த்து சமைக்கலாம். அந்த அளவிற்கு கேரட்டில் உள்ள சத்துக்கள் அதிகம்.




