நீண்ட நாளாக வறட்டு இருமல் பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா இதோ உங்களுக்கான தீர்வு..!!
வரட்டு இருமல் பிரச்சனை காரணமாக பலரும் அவதிப்படுகிறார்கள். இதற்காக எத்தனை மருத்துவமனை எத்தனை மருத்துவர்கள் சந்திப்பது என்று புலம்பும் பல பேரை நாம் தினசரி வாழ்க்கையில் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அந்த வகையில் மாத்திரை மருந்து எல்லாம் கை கொடுக்காதது கூட நாம் வீட்டிலேயே செய்யும் மருந்துகள் கை கொடுக்கும் என்று சொன்னால் நம்புவீர்களா.. ஆம் வறட்டு இருமல் பிரச்சனைக்கு வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து இதை மட்டும் செய்தால் போதும் வறட்டு இருமல் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.
சித்தரத்தை மற்றும் அதிமதுரம் மற்றும் கடுகு மற்றும் வெந்தயம் இந்த நான்கையும் தனித்தனியாக வறுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொன்றிலும் தலா அரை டீஸ்பூன் அளவு எடுத்து தேனில் குழைத்து சாப்பிடலாம் அல்லது பாலில் கலந்தும் சாப்பிடலாம். இவ்வாறு சாப்பிட்டு வர வறட்டு இருமல் பிரச்சனை முற்றிலுமாக தீரும்.




