மஞ்சள்ல ‘குர்குமின்’ அப்படின்னு ஒரு பவர்ஃபுல்லான ஹீரோ இருக்காரு, அவர்தான் இந்த எல்லா நல்ல விஷயங்களுக்கும் காரணம்!
என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
✅வீக்கம், வலிக்கு ‘பை-பை’:
நம்ம உடம்புல தேவையில்லாம வர்ற வீக்கம், மூட்டுவலின்னு சில சமயங்கள்ல கஷ்டப்படுவோம், அதையெல்லாம் இந்த மஞ்சள் குறைச்சிம்!
✅பாடிக்கு சூப்பர் பாதுகாப்பு கவசம்:
மஞ்சள் ஒரு செம ஆன்டிஆக்ஸிடன்ட்! அதாவது, நம்ம உடம்புல இருக்கற கெட்ட வில்லன்களை (free radicals) எதிர்த்துப் போராடி, நம்ம செல்கள் எல்லாம் டேமேஜ் ஆகாம பாத்துக்கும்.
✅இம்யூனிட்டி பவர் ‘ஜிவ்வினு’ ஏறும்:
நம்ம உடம்போட ஆர்மி மாதிரி இருக்கிற நோய் எதிர்ப்பு சக்தியை டபுள் ஸ்ட்ராங் ஆக்கி, சின்ன சின்ன நோய் எதுவும் நம்மகிட்ட நெருங்காம தடுக்கும்!
✅சாப்பாடு செரிக்கிறதுல சிக்கல் இல்லை:
டைஜெஷன் பிரச்சினையா? மஞ்சள் அதை சரிபண்ண ஹெல்ப் பண்ணும். கேஸ், வயிறு உப்பசம்னு சில சங்கடங்கள் வராமலும் பாத்துக்கும்.
✅முகம் பளபளக்கும்:
மஞ்சள் போட்டா முகம் அழகு ஆகுறது மட்டுமில்ல, பரு எல்லாம் வராமலும் தடுக்கும். ஸ்கின்னை நல்லா பொலிவா வச்சுக்கும்!
✅மூளை சுறுசுறுப்பா வேலை செய்யும்:
நம்ம பிரெய்ன் நல்லா ஷார்ப்பா வேலை செய்யவும், ஞாபக சக்திக்கும் மஞ்சள் உதவும்.
✅இதயத்துக்கும் ரொம்ப நல்லது:
நம்ம ஹார்ட்டை பத்திரமா பாத்துக்கறதுலயும் மஞ்சளுக்கு ஒரு பங்கு இருக்கு!
எவ்வளவு சாப்பிடறோம்?
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ன்னு சொல்வாங்க !
சமையல்ல தினமும் கொஞ்சம் மஞ்சள் போடுறது ரொம்ப நல்லது. ஆனா, ரொம்ப அதிகமா மருந்து மாதிரி எடுத்துக்கிட்டா, சில பேருக்கு வயிறு சரியில்லாம போகலாம்.
உடம்புல எப்படி சேருது?
மஞ்சள்ல இருக்கற குர்குமின் நம்ம உடம்புல சட்டுனு சேராது. அதனால, கொஞ்சம் மிளகுத்தூளோட சேர்த்து சாப்பிட்டா, அதோட சக்தி நம்ம உடம்புக்கு முழுசா கிடைக்கும்!
மாத்திரை மருந்து சாப்பிடுறீங்களா?
நீங்க பி.பி., சுகர், இல்ல இரத்தம் நீர்த்துப் போகறதுக்கு மாத்திரைங்க எடுத்துக்கிட்டா, தினமும் அதிகமா மஞ்சள் எடுத்துக்கறதுக்கு முன்னாடி உங்க டாக்டர்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுக்கோங்க.
சில சமயம் அது மருந்தோட வேலையை மாத்தி விட்டுடும்.
சில உடல் பிரச்சினைகள் இருந்தா:
பித்தப்பையில கல், இரும்புச்சத்து குறைபாடு, கர்ப்பமா இருக்கறவங்க, பால் கொடுக்குற தாய்மாருங்க எல்லாம் அதிகமா மஞ்சள் எடுத்துக்கறதுக்கு முன்னாடி டாக்டர் ஆலோசனை ரொம்ப முக்கியம்.
ஆபரேஷன் பண்ணப் போறீங்களா?
அப்போ ஒரு ரெண்டு வாரத்துக்கு முன்னாடியே மஞ்சள் அதிகமா எடுத்துக்கறதை நிறுத்திடுறது நல்லது.




