திருப்பூர் வேலம்பாளையம் காவிரி நகரைச் சேர்ந்த சிவக்குமார் (54) என்ற பனியன் தொழிலாளி, பெங்களூருவில் இதய அறுவை சிகிச்சை செய்துகொண்டு, வருடாந்திர பரிசோதனைக்காக மகன் மவுனிக் உடன் சென்றார். நேற்று முன்தினம் பெங்களூருவில் இருந்து திருப்பூர் திரும்பியபோது, ரயில் ஊத்துக்குளி அருகே வந்தபோது சிவக்குமாருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. திருப்பூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சிவக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருப்பூர் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.




