சென்னை மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ஆனந்தன். இவரது மூத்த மகளுக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால், அதற்கு விருப்பம் இல்லாததால் அவரின் மகள் கடந்த சில நாட்களுக்கு முன் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனால், மிகுந்த மன உளைச்சலில் இருந்த அவர் நேற்று (ஆகஸ்ட் 17) கொளத்தாரில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார்.




