டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் சி.பி. ராதாகிருஷ்ணன் சந்தித்துள்ளார். பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், துணை குடியரசு தலைவர் வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் நேற்று (ஆகஸ்ட் 17) அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று டெல்லிக்குச் சென்று பிரதமரை நேரில் சந்தித்துள்ளார். தொடர்ந்து உள்துறை அமைச்சர், பாஜக மூத்த தலைவர்கள், கூட்டணி கட்சியினரை நேரில் சந்திக்கிறார். தேர்தலுக்கு வேட்பு மனுவும் தாக்கல் செய்கிறார்.




