திருமணம் ஆன ஆண்களுக்கு இந்த கதை சமர்ப்பணம்..!! படித்ததில் பிடித்தது…!!

கணவன் மனைவி இருவருக்குமான பேச்சு
ஞாயிற்றுக்கிழமை அதிகாலைப்பொழுது..
*கணவன் மனைவியை எழுப்பி கேட்டான்.*

“டியர்… (Walking) நடைப் பயிற்சிக்கு போறேன்…
நீயும் வர்றியா?”

கணவனை வித்தியாசமாக பார்த்த அந்த மனைவி,

“ஓ… அப்படின்னா நான் குண்டா இருக்கேன்!
உடம்பை குறைன்னு சொல்றீங்க.. அப்படித்தானே?”

கணவன்:- “அதுக்கில்லைம்மா, Walking போறது ஹெல்த்துக்கு நல்லது!”

மனைவி:- “அப்போ என்னை நோயாளின்னு சொல்றீங்களா?”

கணவன்:- “இல்லை இல்லை!
நீ வரவேணாம். விடு”

மனைவி:- “அப்ப என்னை சோம்பேறின்னு நினைக்கிறீங்க!”

கணவன்:- “ஐயோ இல்லை..
ஏன் எல்லாத்தையும் தப்பாவே புரிஞ்சுக்கிற?”

மனைவி:- “இவ்வளவு நாளா புரிஞ்சுக்காம தான் இருந்தேனா?”

கணவன்:- “மறுபடி பாரு..
நான் அப்படி சொல்லலை”

மனைவி: – அப்புடித்தான் சொன்னீங்க!
அப்ப என்ன நான் பொய் சொல்றேனா?”

கணவன்:- “தயவு செஞ்சு விடு..
காலங்காத்தால ஏன் சண்டை?”

மனைவி: “ஆமாங்க…
நான் சண்டைக்காரிதான்”

கணவன்:- “Ok!
நானும் போகலை. போதுமா?”

மனைவி:- “உங்களுக்கு போக அலுப்பு,
அதுக்கு என்னை குத்தம் சொல்றீங்க”

கணவன்:- “சரி, நீ தூங்கு!
நான் தனியா போய்க்கிறேன்”

மனைவி:- “அதானே… உங்களுக்கு எங்க போனாலும் தனியா போய் enjoy பண்ணனும்!
அதுக்குத்தானே இவ்வளவும் பேசுனீங்க?”

வெறுத்துப்போன கணவன் எவ்வளவு யோசித்தும்,

தான் என்ன தவறு செய்தோம் என்று விளங்கவே இல்லை!

திருமணம் ஆனவர்களுக்கு சமர்ப்பணம்..

படித்ததில் பிடித்தது..!!

Read Previous

படித்ததில் ரசித்தது.. கணவன் மனைவி உறவு இப்படி இருக்க வேண்டும்..!!

Read Next

முடி வளர்ச்சி முதல் மூலம் வரை… இத்தகைய நோய்களை அடித்து விரட்டும் சின்ன வெங்காயத்தில் இருக்கக்கூடிய மருத்துவ பயன்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular