மனைவிக்கு பயப்புடுவேன்…
மகள்களுக்கு பயப்படுவேன்…
உடன் பிறந்தார்க்கு பயப்படுவேன்…
இந்த பயத்தை தவறாக புரிந்து கொண்டு கேள்வி கேட்பவர் கிண்டல் அடித்திருக்கிறார் என நினைக்கிறேன்.
சிறு சண்டை. மனைவி முகம் கொடுத்து பேசவில்லை. அமைதியாய் அவர் வேலை செய்கிறார் என்றால் நல்ல கணவனுக்கு மனைவியின் மௌனம் கொடுமையிலும் கொடுமையாய் இருக்கும்… சகஜமாக குடும்பம் திரும்பும்வரை நிம்மதியாக இருக்காது.
குடும்பத்தில் ஓர் முடிவு எடுக்கப்படும்போது, ஆண் தன்னிச்சையாக எடுக்க இயலும். இருந்தும் “வீட்ல ஒரு வார்த்தை கேட்டு சொல்றேங்கே” என்று சொல்வதில் பயம் இல்லை. தனியாக முடிவெடுத்த கணவனை கொல்ல போவதுமில்லை. ஆனால் அதற்கான கோணங்களை, அதில் உள்ள சாதக பாதகங்களை ஆணைவிட பெண்ணே அலசி ஆய்ந்து கூறுவதில் வல்லவர்கள். அதனால்தான் அவளிடம் ஒரு வார்த்தை என்கிறான்.
திருமணமான உங்கள் நண்பரை இரவு பத்து மணிக்கு மேல உங்களிடம் இருக்க சொல்லுங்கள் பார்க்கலாம். வார்த்தைக்கு வார்த்தை “வீட்ல திட்டுவாங்க மச்சான் கிளம்புறேன்” என புலம்பி கொண்டிருப்பான். இது பயம் இல்லை. திருமணம் ஆனவனின் பொறுப்பு. அங்கே தன்னை எதிர்பார்த்து ஒருத்தி காத்திருக்கிறாள் என்ற தவிப்பு.
குடும்ப அமைப்பின் மேல் காதல் கொண்டவர்கள்…
மனைவிக்கு, மகள்களுக்கு, சொந்த்த்திற்கு பயப்பட்டே தீருவார்கள். பலமான மரம் இருக்கலாம், கிளைகள் இருக்கலாம். வேறின்றி அம்மரம் தழைக்க முடியாது.
அந்த வேர் தான் மனைவி.
அவளுக்கு பயந்து ஒடுங்குவது தவறில்லை.
(சமீபத்தில் லப்பர் பந்து என்ற படம் பார்த்தேன். அழகான தம்பதிகளை அந்த படத்தில் பார்த்தேன்).
சில விதிவிலக்குகள் மீசையை முறுக்கலாம். அதுவும் ஒரு நாள் ஒடுங்கி போகும் நல்ல குடும்பதலைவிக்கு முன்னால்…
மனைவியின் 13 மிஸ்டு கால் பார்த்தபிறகும் ஒருவனுக்கு பயம் வரவில்லை என்றால் அவன்தான் வீரன்.
நான் கொஞ்சம் (பாசாங்கு அறியாத) கோழைதாங்க…😜




