திருமணம் செய்து கொள்வதாக கூறி உடலுறவு கொண்டு ஏமாற்றியதாக கர்நாடகாவை சேர்ந்த மருத்துவ மாணவி அளித்த புகாரின் பேரில், IPL தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடும் வங்காள கிரிக்கெட் வீரர் அபிஷேக் போரெலை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த புகார் தொடர்பாக கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி, அபிஷேக் போரெல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து அவரை 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் கிரிக்கெட் வட்டாரத்திலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




